திரைப்படக் கலைஞர்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12.36% சேவை வரியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட 16 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.
ரஜினி, விஜய், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
காலை 8 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.