100 கோடியைத் தொட்டது ‘துப்பாக்கி’

   thuppakki ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது.

இதன் மூலம், தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த இயக்குனர் என்ற பெருமையப் பெறுகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இந்தியிலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கஜினி’ திரைப்படம்தான் முதன் முறையாக 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலிருந்துதான்,  இந்தியில் 100 கோடிக்கு மேல் வசூலாகும் திரைப்படங்களை ‘100 க்ரோர் கிளப்’ என அழைக்கும் பழக்கம் ஆரம்பமானது.

விஜய் நடித்த ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

‘துப்பாக்கி’ திரைப்படம் 100 கோடியைத் தாண்டியது மகிழ்ச்சியளிக்கிறது.  நான் இயக்கிய படங்கள் முறையே இந்தி மற்றும் தமிழில் முதன் முறையாக 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பெருமையான விஷயம். இப்போது அக்ஷய் குமாரை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் மூலம் 200 கோடி ரூபாயைத் தாண்ட வேண்டும் என்பதே எனது அடுத்த குறிக்கோள்,” என்கிறார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

 

 

Read Previous

த்ரிஷாவின் நண்பர் வில்லனாகிறார்

Read Next

நல்லா பார்த்துக்குங்க…இவங்கதான் ‘கடல்’ கௌதம் – துளசி…