த்ரிஷாவின் நண்பராக இருக்கும் ராணா , ‘நான் ஈ’ படத்திற்குப் பிறகு ராஜ மௌலி இயக்கப் போகும் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார்…
தெலுங்கில், ராஜ மௌலி அடுத்து இயக்கப் போகும் படம் ஒரு சரித்திரப் படம். பிரபாஸ், அனுஷ்கா , ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இந்த படத்தில்தான் ராணா வில்லனாக நடிக்க இருக்கிறார்.
பொதுவாக ராஜ மௌலி இயக்கும் படங்களில் வில்லனுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். இதற்கு சமீபத்தில் வந்து சூப்பர் ஹிட்டான ‘நான் ஈ’ படமே சாட்சி. இந்த படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தமிழ், தெலுங்கில் பரபரப்பாக பேசப்பட்டார்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.