‘கடல்’ படத்தின் அறிமுக நாயகன் கௌதம், அறிமுக நாயகி துளசி இவங்கதான்…
இதுவரைக்கு ஒருத்தரும் இவங்கள நேரா பார்த்திருக்க மாட்டீங்க…சைட்ல பார்த்திருப்பீங்க…முதுகு பக்கம் பார்த்திருப்பீங்க…இல்ல முகத்தை சரியா காட்டாத போட்டோல பாத்திருப்பீங்க..
முதல் முறையா உங்களுக்காக இவங்களோட அழகான முகத்தை பார்க்கக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்க இன்னைக்கு அளிக்கிறதுல பெருமைப்படறோம்…
இது எப்படி கிடைச்சுதுன்னு பார்க்கிறீங்களா…‘கடலி’ படத்தோட இசை வெளியீடு இன்னைக்கு ஹைதராபாத்துல நடந்துச்சி…‘கடல்’ படத்தோட தெலுங்குதான் ‘கடலி’.
இந்த விழாவுலதான் கௌதம், துளசியை அறிமுகப்படுத்தி வச்சாங்க.
ஏ.ஆர்.ரகுமான் இந்த விழாவுல கலந்துக்கிட்டுதும் ஆந்திர தேசத்துல பெருமையா பேசப்படுது.
தமிழ்நாட்டு மேல என்ன கோபமோ மணிரத்னத்துக்கு. முதல்ல தமிழ்ல அறிமுகப்படுத்தாம தெலுங்குல அறிமுகப்படுத்தியிருக்காரு…
படத்தையும் அங்க மட்டும் ரிலீஸ் பண்ணுவாரான்னு தெரியலை…

