விஜய்யின் அடுத்த படம்

Director Nesan
Director Nesan

‘துப்பாக்கி’ படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் அளவு வர்த்தகத்தை தாண்டிய பெருமையப் பெற்றார் விஜய்.

தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அமலா பால் ஜோடியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை அடுத்து விஜய் , சூப்பர் குட் பிலிம்ஸ்  ஆர்.பி. செளத்ரி தயாரிக்கப் போகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அசோக், ஸ்ருதி சர்மா, வடிவேலு நடித்த ‘முருகா’ என்ற படத்தை இயக்கிய நேசன் இந்த படத்தை இயக்கப் போகிறார். டி. இமான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக அநேகமாக காஜல் அகர்வால் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Read Previous

நல்லா பார்த்துக்குங்க…இவங்கதான் ‘கடல்’ கௌதம் – துளசி…

Read Next

‘ஃபோர்ப்ஸ்’ பிரபலமானவர்கள் பட்டியலில் ஹன்சிகா

Most Popular