‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்தவரும், தற்போது சேட்டை, சிங்கம் 2, வாலு, பிரியாணி ஆகிய படங்களில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி.
பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ ன் இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலில், இள வயது பிரபலங்களின் பட்டியலில் முதற்கட்ட பரிசீலனயில் ஒருவராக ஹன்சிகாவையும் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த அறிவிப்பைக் கேட்டு உற்சாகமான ஹன்சிகா, “என்னால் இதை நம்பவே முடியவில்லை, என் ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சக நடிக, நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அனைவருக்கும் எனது நன்றி”, என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.