முனி – 3 ஆரம்பமானது….

muni-3ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி – 3 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

முனி, முனி – 2 காஞ்சனா, ஆகிய படங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாகம் பாகமான முனி – 3 படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

முனி – 2 காஞ்சனா, தெலுங்கு , தமிழ் ஆகிய மொழிகளில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

முனி – 3 படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘ஆடுகளம்’ டாப்ஸீ நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் லட்சுமி ராய் நடிப்பதாக சொல்லப்பட்டது.

முதல் இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் நகைச்சுவை கலந்த திகில் படமாக எடுக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

2013 மத்தியில் இந்த படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

மீண்டும் ஹிந்தியில் விக்ரம்

Read Next

‘கத்தி’ சண்டை போட்ட அமலா பால்…

Most Popular