‘நோ’ சொன்ன ‘எஸ்’. ஜானகி

s-janakiதமிழ்த் திரையிசை உலகல் மட்டுமல்ல , தென்னிந்திய திரையிசை உலகிலும் மறக்க முடியாத கானக் குயில் எஸ். ஜானகி அவர்கள். எத்தனை எத்தனை பாடல்கள், கொஞ்சலாக, கெஞ்சலாக, காதலாக, மழலையாக, தாலாட்டாக , இப்படி   சொல்லிக் கொண்டே போகலாம் அவருடை குரலை ரசிப்பதற்கு.

அது என்னமோ மற்ற பாடகியரை விட ஜானகியம்மாவின் குரலில் ஒரு தனி வசீகரம் இருக்கும்.  கருப்பு வெள்ளை காலத்தில் ஆரம்பமான அவருடைய திரையுலகப் பணி ‘நெஞ்சினிலே…நெஞ்சினிலே…என இன்று வரையும் நம் நெஞ்சில் ரசிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒலிக்கும் எஃப்.எம். நிலையங்கள் முதல், வீட்டில் ஒலிக்கும் சிடி வரையிலும் அவருடைய பாடல்கள் ஒலிக்காத நிமிடங்களே இருக்க முடியாது.

அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, ‘இந்திய’ சினிமா என்றாலே ‘இந்தி’ சினிமாதான் என்ற பொய்ப்புரை இந்த 2013லும் கூட ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

பிறப்பால் தமிழராய் இல்லையென்றாலும், பச்சைத் தமிழனை விடவும் , தங்கத் தமிழை தன் தேமதுரக் குரலோசையால் திகட்டாத தெள்ளமுதாக படைத்தவர் ஜானகி. இன்றைய வேற்று மொழி பாடகர்கள் இவரைப் போன்று தமிழை உச்சரிக்க முடியாது என்பதே நம் வாதம்.

தமிழை, தேனாய், இனிமையாய் நேசித்து, அனுபவத்தி பாடி எங்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த இசையரசி….

விருதை வேண்டாம் என்று மறுத்தது…

 நம்மைப் போன்றோரின் மனதில் அவர் வீற்றிருக்கும் அழகை விட அந்த விருது அவருக்கு சேர்க்கும் அழகு குறைவாகத்தானிருக்கும்….

Read Previous

அமைதிப்படை – 2 ‘முப்பெரும் விழா’ விரைவில்…

Read Next

பத்மஸ்ரீ எனக்கு ‘கௌரவம்’ – ஸ்ரீதேவி