‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இசை நேரடியாக இன்று கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று நடைபெறுவதாக இருந்த விழா ரத்து செய்யப்பட்டது குறித்து சற்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சற்று முன் கிடைத்த தகவலின்படி, இப்போது படத்தின் ஆடியோ சிடிக்கள் நேரடியாக கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல், ரெஜினா, பிந்து மாதவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.