பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’

parthibanன்றைய ‘லொள்ளு’, ‘ஜொள்ளு’ போன்ற யூத்துகளின் ஃபேஸ்புக், டிவிட்டர், ‘கமென்ட்’  விஷயங்களை அன்றே ‘நக்கல்’ , ‘நையாண்டி’யுடன் தனது படங்களில் கலந்து கொடுத்து 90களின் இளசுகளை அதிகமாகவே கவர்ந்தவர் பார்த்திபன்.

‘பொண்டாட்டி தேவை’ படத்தில் அவர் வைத்த ஒரு காட்சியில் பெண்களுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லக் கூட ஆண்களுக்கு பயம் வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ( பார்க்காதவர்கள் ‘பொண்டாட்டி தேவை’ படத்தை தேடிப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்) அப்படி இளைஞர்களின் மனதை கற்பூரமாகப் புரிந்து கொள்பவர்.

தற்போது கரு. பழனியப்பன் இயக்கத்தில் ‘ஜன்னல் ஓரம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பார்த்திபன் அடுத்து இயக்குனராக அவதாரம் எடுக்கும் படத்திற்குப் பெயர் ‘ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. குழம்ப வேண்டாம், படத்தின் பெயரே இதுதானாம்.

‘புதிய பாதை’யின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய பாதை வகுத்தவர், இந்த 2013லும் ‘ஃபுல் பார்ம்’ல் தான் இருக்கிறார் என்பதற்கு இந்த தலைப்பே ஒரு எடுத்துக்காட்டு.

வாங்க, ஸார் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘புதிய பாதை’யை காட்டுங்க….

Read Previous

ரஜினிகாந்த் இன்று ‘விஸ்வரூபம்’ பார்க்கிறார்…

Read Next

விஸ்வரூபம் – இன்று 600 திரையரங்குகளில் வெளியாகிறது

Most Popular