‘தலைவா’ படத்தில் தம்பி இயக்கத்தில் அண்ணன்

udhaya-vijayவிஜய் நடிப்பில் விஜய் இயக்கி வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இயக்குனர் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா. இவர் தற்போது ‘ஆவி குமார்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய், உதயா இருவருமே தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன்கள்.

இப்போது ‘தலைவா’ படத்தில் உதயா ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக இன்று மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள உதயா, ‘தலைவா’ படத்தில் தம்பியும் சிறந்த இயக்குனருமான விஜய் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

‘பூலோகம்’ படத்தின் கிளைமாக்ஸ் பிரம்மாண்டம்

Read Next

ஸ்டார்ட் த மியூசிக்…கவுண்டமணி வந்துட்டாரு…

Most Popular