தெலுங்கில் ‘ஒக்கடு’ (தமிழில் ‘கில்லி ‘ ) திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வேகத்தை காட்டியவர் இயக்குனர் குணசேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் தற்போது ராணி ருத்ரம்மா தேவி என்ற சரித்திர கால படத்தை 3D-யில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குகிறார். ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்டான இந்த படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்காக அனுஷ்கா கடந்த சில மாதங்களாகவே வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.
அருந்ததி படத்திற்குப் பிறகு தனக்கு சரியான படமாக இந்த படம்தான் அமைந்துள்ளது என அனுஷ்கா மிகவும் ஈடுபாட்டுடன் இந்த படத்திற்காக உழைத்து வருகிறார்.
இந்த படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா. இந்த கதையை உருவாக்கும் போதே இசை, இளையராஜாதான் என முடிவெடுத்து விட்டாராம் இயக்குனர் குணசேகர்.
இசைஞானியின் இசையில் இப்படத்திற்கான பாடல் கோர்ப்பும் நடந்து விட்டது. 6 பாடல்களை இளையராஜா உருவாக்கியுள்ளார். விரைவில் பாடல் பதிவு லண்டனில் நடக்க இருக்கிறது.