படம் மேல படம்தான் ‘பவர்ஸ்டார்’ கையிலே….

onbathula guru power star_00013வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே….வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே….என்ற பாடலை  இப்போது பாட மிகவும் பொருத்தமானவர் நம்ம பவர் ஸ்டார்.

அவங்க  கூப்டாக, இவங்க கூப்டாக என்ற கணக்காய் எண்ணற்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு ஏன் இயக்குனர் ஷங்கர் கூட தான் இயக்கி வரும் ‘ஐ’ படத்தில் பவர்ஸ்டாரின் காட்சிகளை அதிகமாக்கி விட்டாராம் என பேசும் அளவிற்கு பவர்ஸ்டார் மிகப் பெரிய பப்ளிகுட்டியைப் பெற்று விட்டார்.

இன்றைய பவர்ஸ்டார் செய்தி, ‘ஒன்பதுல குரு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடமனமாடியிருப்பது. பி.டி.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், லட்சுமிராய் நடிக்கிறார்கள். இப்ப்டத்திற்காக பவர் ஸ்டார் இடம் பெற்று நடித்த ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஒரே படத்துல வளர்த்து விட்ட சந்தானமே சீக்கிரம் பொறாமைப்பட்டுருவார் போல இருக்கே….

Read Previous

இளையராஜா இசையில் பிரம்மாண்டமான படம்

Read Next

பிரசாந்த் படம் இயக்கவில்லை – ராஜமௌலி

Most Popular