நடிகர் விஜய்யிடம் பல வருடங்களாக பி.ஆர்.ஓ. ஆக வேலை பார்த்து வரும் பி.டி.செல்வகுமார் முதல் முறையாக இயக்கும் ‘ஒன்பதுல குரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, தேவி திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் விஜய் கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். விழாவில் கலகலப்பாகப் பேசி அனைவரையும் ரசிக்க வைத்தார், அவர் பேசியதாவது,
”இந்த நாள் ஒரு இனிய நாள் என்று சொல்ல வேண்டும். ஏற்கெனவே இந்த திரையரங்கில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படததின் இசை வெளியீடுடு நடந்தது, அந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
ஒன்பதுல குரு படத்துல என்னை ஒரு பாட்டுக்கு என்னை நடனமாடணும்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் யோசனை செஞ்சேன். என்ன ஸார், படம்லாம் எடுத்து முடிச்சிட்டீங்க, இப்ப வந்து கேக்கறீங்களேன்னு சொன்னன். அப்ப பிஆர்ஓ , ஸார் , இந்த படத்தோட டைரக்டர் விஜய்யோட பிஆர்ஓ ன்னு சொன்னாரு. அந்த ஒரே காரணத்துக்காக இந்த படத்துல நடிக்க உடனே ஒத்துக்கிட்டேன்.
ஒரே நாள் ராத்திரில முடிவு பண்ணி , உடனே காஸ்ட்டியூம்லாம் ரெடி பண்ணி, மறுநாள் காலையில் நான் நடிச்ச பாட்டை ஆரம்பிச்சி அன்னைக்கு நைட்டே ஷுட்டிங்க முடிச்சிட்டாங்க. அவ்வளவு வேகமா வேலை பார்த்தாங்க.
ஏற்கெனவே, எனக்கு ஒரு தம்பி சந்தானம் கிடைச்ச மாதிரி இன்னொரு தம்பி விஜய் கிடைச்சிருக்காரு. தம்பி விஜய் மேல நான் மரியாதையும் பாசமும் வச்சிருக்கேன்.
செல்வகுமார் இந்த படத்தை முதல் முறையா இயக்கியிருக்காரு. இந்த படம் மாபெரும் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்,”எனப் பேசினார் பவர் ஸ்டார்.