ஆதி பகவன் அடுத்த வாரம் ரிலீஸ் ?

aathi-bagawanஅமீர் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கும் படம் ஆதி பகவன்.

ஏறக்குறைய இரண்டரை வருடங்களாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் படம் பிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என இயக்குனர் அமீர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது.

ஜெயம் ரவி பல விதமான கெட் அப்புகளில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் எனவும் பல விதமான செய்திகள் வந்தன.

இந்த படம் நேற்று சென்சாருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. இன்று அநேகமாக படத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

தொடர்ந்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு வரும் இந்த படத்தை அடுத்த வாரம் பிப்ரவரி 22ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

விஜய்யும் எனக்கு தம்பிதான்… – பவர் ஸ்டார்

Read Next

A Good Day To Die Hard