‘லைப் ஆப் பை’ என்ற மாபெரும் வெற்றிக் காவியத்தை வழங்கிய ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் மிகப் பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘A Good Day To Die Hard’ .
ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த ‘டை ஹார்ட் ‘தொடர் பட வரிசையில் இதுவரை நான்கு படங்கள் வெளிவந்துள்ளன. அந்த நான்கு படங்களிலும் ஜான் மெக்லேன் என்ற காவல் துறை அதிகாரி வேடத்தில் தோன்றி நடித்த ப்ரூஸ் வில்லிஸ் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ப்ரூஸ் வில்லிஸ் தவிர அவரது மகன் கதாபாத்திரத்தில் ஜெய் கௌட்னி என்ற நடிகரும் ஆக்ஷன் காட்சிகளில் இணைந்து கலக்கியுள்ளார்.
தனது மகன் ஜாக் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டு, ரஷ்யா விரைகிறார் ஜான். அங்கு சென்றவுடன்தான் விஷயத்தின் விபரீதத்தை உணர்கிறார் ஜான். நியூக்ளியர் ஆயுதக் கடத்தலில் சிலர் ஈடுபட்டிருப்பதையும் , அது தொடர்பாக புலானாய்வு செய்யும் சிஐஏ அதிகாரிதான் ஜாக் என்பதும் ஜானுக்கு தெரிய வருகிறது.
இலக்கு ஒன்றாக இருந்தாலும் வழி வெவ்வேறாக இருப்பதால் ஜானும், ஜாக்கும் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்காக அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள்.
படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் ஜான் மூர். படத்தில் ஏறக்குறைய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்.
வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, நியூயார்க், புடாபெஸ்ட், ஹங்கேரி போன்ற இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.