‘ஐ’க்கு ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்..

shankars-iங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம், எமி ஜாக்சன் பங்கு பெறும் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளது.

இந்த பாடலுடன், மேலும் சில காட்சிகள் ஐதராபாத்தில் 20 நாட்கள் வரை படமாக்கப்பட  உள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்து கொடுத்து விட்டாராம். ஏற்கெனவே, ஜனவரி மாதக் கடைசியில் ஷங்கர் பாடலின் ஷுட்டிங்கை முடித்து விட்டார்.

தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுக்காத விக்ரம் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தன்னை வருத்திக் கொண்டு மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சந்தானம் மீது கே.பாக்யராஜ் ஐகோர்ட்டில் வழக்கு

Read Next

விஜய்யும் எனக்கு தம்பிதான்… – பவர் ஸ்டார்

Most Popular