அமீரின் ஆதி பகவன் திரைப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் 29 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வரும் 22ம் தேதி வெளியாகும் இத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அமீர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்தது.
அமீர் முதன் முறையாக முற்றிலுமான ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார். டிரைலரைப் பார்க்கும் போது ஒரு சர்வதேசப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது.
எ மாஃபியாசோ ஆக்ஷன் லவ் ஸ்டோரி என படத்திற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.
இன்னும் சில நாட்கள் காத்திருப்போம் படத்தை ரசிப்பதற்கு…