தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பவன் கல்யாண், ஜுனியர் என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும் புதுமுகமான ஶ்ரீனிவாஸ் என்பவருடன் ஜோடி சேர்ந்து அவர் நடிக்க உள்ளார். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை,காரணம், இவர் பிரபல தயாரிப்பாளரான பெல்லம்கொண்டா சுரேஷ்-ன் மகன். மேலும், படத்தை இயக்கப் போது முன்னணி இயக்குனரான வி.வி. விநாயக்.
இப்படத்தின் படப்பிடிப்பு , பூஜையுடன் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. தாசரி நாராயணராவ், கே. ராகவேந்திர ராவ், வெங்கடேஷ், சித்தார்த், சுனில் மற்றும் பல தெலுங்கு திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தேவிஶ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆக்ஷன், லவ், ஃபேமிலி சென்டிமென்ட் படம் இது என்கிறார் இயக்குனர் வி.வி. விநாயக்.