இளம் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகும் ‘ஆண்டனி’

ஆண்டனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆண்டனி’.

இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துஉள்ளனர்.

இந்த படத்திற்கு 19 வயதே ஆன ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .

விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர்,

“இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயதுடையவர்கள். படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்,” என்றார்.

ஜெயசித்ரா பேசும் போது,

படக் குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்துள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.

‘வெப்பம்’ ராஜா பேசியதாவது,

படத்தில் அனைவரும் அவர்களது வேலைகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்துஉள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிகா அருமையாக இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம். கண்டிப்பா அவர் மிகப் பெரிய நடிகராக வருவார். ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ‘ஆண்டனி’ படத்தில் இவர் நடித்துஉள்ள கதாபாத்திரத்தை பண்ண முடியும். மிகச் சிறப்பாக நடித்துள்ளார்,” என்றார்.

இயக்குனர் குட்டி குமார் பேசுகையில்,

“இந்த படத்தினை உருவாக்கக் காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்துள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்தியாசமான படக் காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல், மற்றும் பூமிக்குக் கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

உயிரைப் பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிகாவிடடம் நல்ல திறமை உள்ளது. நன்றாக இசையமைத்திருக்கிறார்,” என்றார்.

இசை அமைப்பாளர் ஷிவாத்மிகா பேசும் போது,

“படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்தில் நாங்கள் அனைவரும் அறிமுகக் கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

Read Previous

‘காளி’ படத்தில் அறிமுகமாவது பெருமை – ஷில்பா மஞ்சுநாத்

Read Next

Antony – Official Trailer