உலகம் முழுவதும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட விஸ்வரூபம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நான்கு வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் முதலில் பெரிய நகரங்களில் திரையிடப்பட்ட இப்படம் வாரம் வாரம் பல நகரங்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல ஊரிலிருந்து வரும் வேண்டுகோளுக்கிணங்க வினியோகஸ்தர்கள் படத்தை திரையிட்டு வருகிறார்கள்.
இந்த வாரமும் திரையிட்டால் ஐந்தாவது வாரமாக வெற்றிகரமாக திரையிடப்படும் படமாக அமையும். பொதுவாக தமிழ்ப் படங்கள் ஒரு ‘வீக் என்ட்’ என்று சொல்லக் கூடிய வார இறுதி நாட்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே திரையிடப்படுவது வழக்கம்.
இதை விஸ்வரூபம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. யுஎஸ்ஸில் மட்டும இதுவரை 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.