ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படம் ‘நுங்கம்பாக்கம்’.
அஜ்மல், ஆயிரா , மனோ மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விஷால், விக்ரமன், எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் விஷால் பேசியதாவது,
“இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்.
ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்பந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதற்கு இப்போது ‘நுங்கம்பாக்கம்’ என்று டைட்டிலை மாற்றினீர்கள் ?. சென்சாருக்காகவா, இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்களா ?. ஏன் பயப்படனும், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.
என்னோட ‘இரும்புத்திரை’ படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன்,” என்றார்
இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும் போது,
“ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல, அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். எனக்கு வேற வேலை தெரியாது, சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் ‘நுங்கம்பாக்கம்’ நல்ல படமாக வரும்,” என்றார்.
இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், சினேகன், கதிரேசன், அஜ்மல் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.