சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.
பூஜையில் விஜய், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, இணை தயாரிப்பாளர்களான நடிகர்கள் ஜீவா, ‘ஜித்தன்’ ரமேஷ், இசையமைப்பாளர் இமான், படத்தின் இயக்குனர் ஆர்.டி. நேசன் ஆகியோருடன் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘ஷாஜகான்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’ அனைத்துமே மாபெரும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், மோகன்லால் முதன் முறையாக இணைந்து ‘ஜில்லா’ படத்தில் நடிக்கிறார்கள்.
விஜய் ஜோடியாக ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு காஜல் அகவர்வால் நடிக்கிறார். ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மஹத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
மேலும், தம்பி ராமையா, பிரம்மானந்தம், சூரி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது . படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகி வருகின்றன.
