லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் நந்தினி இயக்கத்தில் கார்த்திக் குமார், ராதிகா ஆப்தே நடிக்கும் படம் ‘கொலை நோக்குப் பார்வை’.
‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ படங்களை அடுத்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் இது.
அஜ்மல், ரூபா மஞ்சரி நடித்த ‘திரு திரு துறு துறு’ படத்துக்குப் பிறகு நந்தினி இந்த படத்தை இயக்குகிறார்.
கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ஒரு த்ரில்லர் படம் . கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இக்கதையை சுஜாதா நடராஜனுடன் இணைந்து எழுதியிருக்கிறார் இயக்குனர் நந்தினி.
அஸ்வத் இசையமைக்க, லலிதானந்த் , மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, ஊட்டி, கேரளா போன்ற இடங்களில் நடைபெறுகிறது.