‘அழகன்’ பவர் ஸ்டார் பாடல் – இயக்குனர் விளக்கம்

azhagan azhagi shooting_00013ந்தா பெரியசாமி இயக்கி வரும் ‘அழகன் அழகி’ படத்தில் பவர் ஸ்டார் நடித்து படமாக்கப்பட்டுள்ள ‘டெரர் லவ் ஆந்தம்’ பாடலின் சிறு பகுதி யு டியூப்பில் வெளியிடப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் பலரும் அதை விமர்சித்தும் உள்ளனர்.

இது தொடர்பாக இயக்குனர் நந்தா பெரியசாமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

“பவர் ஸ்டார் பங்கு பெறும் ‘டெரர் லவ் ஆந்தம்’ குறை ரசனை கொண்டாதாக அமையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். மேலும், படத்திற்கு அவசியம் என்னும் தெளிவோடுதான் இடம் பெறச் செய்திருக்கிறேன்.

தன்னம்பிக்கை உள்ள எந்த ஆணும் அழகன்தான் என்னும் கருத்தை முன் வைக்கும் படம் ‘அழகன் அழகி’. இக்கருத்தின் அடையாளம் பவர் ஸ்டார். இதனை பவரின் எதிர்மறையான விமர்சனங்களின் ஊடாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

அவ்விதத்தில், அந்த நடனக் காட்சி குறித்த சில கடுமையான விமர்சனங்கள் ‘படத்திற்கு இந்த நடனக் காட்சி அவசியம்’ என நான் நினைத்ததை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

ஆமாம், எதையும் கடந்து தன்னம்பிக்கையோடு இருக்கும் ஆண்தான் ‘அழகன்’.

எனவே, என் அன்பானவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், முன் முடிவான விமர்சனக் கருத்துக்களைத் தவிர்த்து , விரைவில் ‘பவர் ஸ்டார்’ பங்கு பெறும் ‘டெரர் லவ் ஆந்தம்’ இடம் பெற்றுள்ள பொருத்தப்பாட்டை முழுமையாக உள் வாங்கிய பின்பு, உங்களிடமிருந்து வரும் கருத்துக்களுக்காக திறந்த மனதோடு காத்திருக்கிறேன், ” என்று கூறியுள்ளார்.

Read Previous

நந்தினி இயக்கும் ‘கொலை நோக்குப் பார்வை’

Read Next

என் அழகின் ரகசியம் – ஹன்சிகா

Most Popular