உண்ணாவிரதம் – அஜித், சூர்யா, கார்த்தி பங்கேற்பு

nadigar sangam fasting 4_00017

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, கே. பாக்யராஜ், வி.எஸ். ராகவன், எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், ஹரிகுமார் மன்சூரலிகான் தற்போது உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.

விஜய் ‘தலைவா’ படப்பிடிப்பில் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து அவர் எழுதிய கடிதம் சற்று முன்னர் படிக்கப்பட்டது.

‘ஈழ மக்களின் விடியலுக்கு நான் என்றும் துணை நிற்பேன்’ என விஜய் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

கேடி பில்லா கில்லாடி ரங்கா – விமர்சனம்

Read Next

நடிகர்கள் உண்ணாவிரதம் – பங்கேற்றுள்ளவர்கள் விவரம்