வின்செண்ட் செல்வா இயக்கி வெளிவரத்தயாராக இருக்கும் படம் ‘துள்ளி விளையாடு.’
ஆர்.பி. ஸ்டுடியோஸ் தயாரிப்பில், யுவராஜ், தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், சூரி நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது.
படத்தினைப் பார்த்து விட்டு இயக்குனர் வின்செண்ட் செல்வாவை பாராட்டினார் விஜய்.
“கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம் புதியவர்கள் நடித்த படம் போன்றே தெரியவில்லை. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும்டக் ஆஃப் வாரை’ ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..” என்றார்.
‘U’ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘துள்ளி விளையாடு’ விரைவில் வெளியாகவிருக்கிறது.