இயக்குனர் ஹரி – சூர்யா காம்பினேஷனில் வெளிவந்த ‘சிங்கம்’ 2010ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மீண்டும் இதே கூட்டணி ‘சிங்கம் 2’ படத்திலும் இணைந்துள்ளது.
இந்த படத்தின் இசை நேற்று வெளியிடப்படதைத் தொடர்ந்து ‘சிங்கம் 2’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், சூர்யா, ஹன்சிகா, தயாரிப்பாளர் பாடலாசிரியர் விவேகா, ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் படம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியியில் சூர்யா பேசும் போது , “ படம் பார்த்தாச்சி, அவ்வளவு திருப்தியாவும், சந்தோஷமாவும், மன நிறைவாவும் இருக்கு.
டிரைலரைப் பார்த்த உடனே இயக்குனர் ஹரிகிட்ட ‘சிங்கம் 3’ டிரை பண்ணலாமான்னு கேக்கத் தோணுது.
சினிமாவே ஒரு மேஜிக்தான். அது மறுபடியும், மறுபடியும் ப்ரூவ் ஆகிட்டிருக்கு. காட்சிகள் எல்லாத்தையும் பார்க்கும் போது, பிரமிப்பாவும், பிரம்மாண்டமாவும் இருக்கு. அதுக்கு, இங்க இருக்கிற எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.
2010ல ‘சிங்கம்’ வெளிவந்த போது ‘சிங்கம் 2’ பத்தி யோசிக்கவே இல்லை. பெரிய ஆதரவு, அன்பு, மதிப்பு , மரியாதை அந்த படத்துக்கு கிடைச்சது. எனக்கும் பெரிய பிளாட்ஃபார்ம் அமைச்சிக் கொடுத்த படம். வணிக ரீதியாவும் சரி, ரசிகர்கள்கிட்டயும் சரி இயக்குனர் ஹரி அதை அமைச்சிக் கொடுத்தாரு.
இந்த படத்துக்காக ஒவ்வொருத்தரும் ரொம்ப உழைச்சிருக்காங்க. அதைப் பத்தி நினைக்கும் போது ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு,” என்றார்.