‘லவ் பெயிலியர் ஆந்தம்’ வெளியீடு…

love failure anthem_00022வி. சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ‘குற்றாலம்’ படத்தில் புதுமுகம் வாலி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில்  ரியாஸ்கான், சஞ்சய்ராம், மீனு கார்த்திகா, சௌகந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக வாலி, ரியாஸ்கான் மற்றும் பலர் பங்கு பெறும் புரமோஷனல் பாடலாக லவ் பெயிலியர் ஆந்தம் என்ற பெயரில்,

“காதலை கண்டு பிடிச்சவன் யாரு

மவனே கையில கிடைச்சா செத்தான்,”

என்ற பாடல் காட்சியை சுமார் 50 லட்ச ரூபாய் செலவில் ரஷ்ய மாடலிங் பெண்கள் பங்கு பெற மிகப் பிரம்மாண்டமான முறையில் படமாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் பாடலை எழுதி பாடி இசையமைத்து இருப்பவர் ஹைட் கார்த்தி. இந்த பாடலுக்கான நடனத்தை அமைத்தவர் பாபி ஆண்டனி.

வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கும் சஞ்சய்ராம் தனது பாணியிலிருந்து மாறி வேறு மாதிரியான ஒரு கதைக்களம், படமாக்கிய விதம் என்று வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

“லவ் பெயிலியர் ஆந்தம்” என்ற பெரியல் ஒரு பாடலை மட்டும் இப்போது வெளியிட்டுள்ளார்கள்.

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

KSS படத்திற்கு ஹாலிவுட்டில் ஒலிக்கோர்வை…