ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘குக்கூ’.
இயக்குனர் லிங்குசாமியிடம் ‘பீமா, பையா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், பத்திரிகையாளருமான ராஜு முருகன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் நாயகனாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறார். நாயகியாக ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மலையாள ரீமேக்கான ‘பிளாக் பட்டர்ஃபிளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
மற்றும் ‘குட்டிப்புலி’ முருகதாஸ், ‘ஆரண்ய காண்டம்’ சோமசுந்தரம், இயக்குனர் ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
நாம் தினமும் சந்திக்கும் , ஆனால் கவனிக்கப்படாத எளிய மனிதர்களின் காதல், அன்பு உணர்வுகளை மகிழ்ச்சியாக , அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் இப்படம் உருவாக இருக்கிறது.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத்தொகுப்பு – ஷண்முகம், பாடல்கள் – யுகபாரதி, கலை – ராமலிங்கம், நடனம் – ஷெரீப், தயாரிப்பு மேற்பார்வை – செந்தில், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஷண்முகம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.