‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பாண்டி ராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான டி.ஆர். குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சிம்புவின் தம்பியான குறளரசன் ஒரு ஹீரோவாகவே அறிமுகப்படுத்தப்படுவார் என்று நாம் எதிர்பார்த்த நிலையில் அவர் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாவது ஆச்சரியமான விஷயம்தான்.
இந்த படத்தை ஒரு அழகான கவிதையான காதல் கதையாக எடுக்க இருக்கிறாராம் பாண்டிராஜ்.
படத்தின் டைட்டில், மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில்…