இதுதான் ‘தலைவா’ கதை…

thalaivaa vijayவிஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் நடிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இசையைமப்பில் விஜய் இயக்கும் படம் ‘தலைவா’.

இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 9ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

‘தலைவா’ படத்தின் கதை என்ன என்பது தற்போது வெளியே கசிந்துள்ளது.

விஜய்யின் அப்பாவான சத்யராஜ் அந்த ஊருக்கே (மும்பை) தாதாவாக இருக்கிறார். எந்த சட்டமும் இவரை ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் சத்யராஜ் இறந்து விட, வெளிநாட்டில் இருக்கும் அவருடைய மகனான விஜய் ஊருக்கு திரும்புகிறார்.

அப்பா விட்டுச் சென்ற வேலைகளை அவர் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் அவரை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் படத்தின் கதையாம்.

தாதாவின் மகன் எப்படி தலைவன் ஆகிறான் என்பதான் இப்படத்தின் ஒரு வரிக் கதை என சொல்கிறார்கள்.

இந்த கதை உண்மையா, பொய்யா என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.

அது வரை ‘தலைவா’ ரசிகர்களும் ‘தலை’ ரசிகர்களும் பொறுத்திருக்க மாட்டார்களா என்ன ?

Read Previous

எனக்கு தேவைப்பட்ட வெற்றி – சூர்யா

Read Next

விக்ரம் ஒரு உழைப்பாளி – பி.சி.ஸ்ரீராம்