விக்ரம், ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கதாநயாகனாக நடித்தார்.
அதன் பின் மீண்டும் இப்போதுதான் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் மூலம் பி.சி.ஸ்ரீராமுன் இணைந்து பணிபுரிகிறார்.
பி.சி. ஸ்ரீராம், விக்ரமைப் பற்றி கூறியதாவது,
“நடிகனாக மட்டுமல்ல…மனிதனாகவும் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்திக்கொள்கிற ஒருத்தர். ‘நமக்கு இவ்வளவுதான் வரும்’னு பெரும்பாலும் பயப்படுவாங்க. ஆனா, விக்ரம் ‘தனக்கு இதெல்லாம் வருமா’னு சோதனை பன்றதையே வேலையா செய்றவர்.
‘மீரா’ படத்தில் ஹீரோவாக நடிச்ச விக்ரம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் ‘குருதிப் புனல்’ படத்துல டப்பிங்லாம் பேசினார். என்ன செஞ்சுட்டு இருந்தாலும்,அதை சினிமால செய்யணும்கிறதுதான் அவரோட ஐடியா. என்னைப் பொறுத்தவரை திறைமையோடு கூடிய முயற்சிங்கற விஞ்ஞானம் தப்பே பண்ணாது. அதுக்கு சரியான உதாரணம் விக்ரம்தான்,” என்று கூறியுள்ளார்.