முதல்வருக்கு விஜய் வேண்டுகோள்…

thalaivaa audio launch_00056சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி. தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும், காவல்துறையினரையும் விஜய் பாராட்டினார்.

அது மட்டுமல்லாமல் முதல்வருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளளார்.

“நமது முதல்வர் புரட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சிசை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இப்படி எத்தனையோ நல்ல  திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர் அவர்கள் ‘தலைவா’ பிரச்சனையிலும் தலையிட்டு , விரைவில் தமிழகமெங்கும் ‘தலைவா’ வெளிவர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுவரை என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என விஜய் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read Previous

நான் அரசுக்கு எதிரானவன் இல்லை – தனுஷ்

Read Next

‘ராஜா ராணி’ – 23ம் தேதி இசை வெளியீடு