‘ராஜா ராணி’ – 23ம் தேதி இசை வெளியீடு

raja-rani-arya-nayantharaஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் ஏ.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராஜா ராணி’.

இசை அமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ் இசையில் இந்த படத்தின் இசை ஒரு   இசைப் பயணமாக இருக்கும் என்பது படக் குழுவினரின் எதிர்பார்ப்பு.

இந்த மாதம் 18ஆம் தேதி இப்படத்தின் டிரைலரை மட்டும்   வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பு நிறுவனங்கள், படத்தின்  இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் இணைத்து ஒரு மாபெரும் விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனால், டிரைலர் மற்றும் இசை வெளியீடு நிகழ்ச்சி வருகின்ற 23ஆம் தேதி விமரிசையாக நடை பெற உள்ளது.

Read Previous

முதல்வருக்கு விஜய் வேண்டுகோள்…

Read Next

4 நாளில் 100 கோடி – ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ சாதனை