இன்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மத கஜ ராஜா’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மட்டுமே வெளியாகிறது.
புது இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.
“ஊதா கலரு ரிப்பன்…உனக்கு யார் அப்பன்” என கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி போட்டு போட்டு சின்னப் பசங்களையும் பாட வச்சிட்டாங்க.
இன்றைய ரசிகர்களின் ரசனையை அறிந்து இப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார் என்கிறார்கள்.
அதனால்தான் அடுத்த படமும் அவருக்கு உடனே கிடைத்துள்ளது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனையே ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார் பொன்ராம்.
வாலிபர்களை வருத்தப்பட வைக்காம, வறுத்தெடுக்காம இருந்தால் இந்த படமும் ஹிட் படம்தான்…