நடிகர் பரத் திருமணம்

actor barath - jesleyஇயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.

பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்) ஆகிய இருவருக்கும் நேற்று (09.09.2013) திருமணம் நடைபெற்றது .

இவர்களின் வரவேற்பு  நிகழ்ச்சி செப்டம்பர்14 சனிக்கிழமை அன்று சென்னை MRC நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில்  மாலை ஐந்து மணிக்கு  நடைபெற உள்ளது.

திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடக நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Read Previous

வேந்தரை விட்டு விலகிய லிப்ரா…

Read Next

‘நினைத்தாலே இனிக்கும்’ டிரைலர் – கமல்ஹாசன் வெளியிடுகிறார்