அண்ணனுக்கு ஜே – ஆகஸ்ட் 17ல் ரிலீஸ்

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – G.B.வெங்கடேஷ்.

இத்திரைப்படம் ஆகஸ்டு 17ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Read Previous

‘தொட்ரா’ கதை மீது நம்பிக்கை இருக்கிறது – இயக்குனர் மதுராஜ்

Read Next

நடிகராக பாராட்டப்படும் ஸ்டன் சிவா