இன்று 20 செப்டம்பர் 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்.
6 மெழுகுவர்த்திகள்
அபி அபி பிக்சர்ஸ் மற்றும் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.இசட். துரை இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் படம். ஷாம், பூனம் கௌர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
யா யா
எம் 10 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஐ. ராஜசேகரன் இயக்கத்தில் விஜய் எபினேசர் இசையமைத்திருக்கும் படம். சந்தானம், சிவா, தன்ஷிகா, சந்தியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மௌன மழை
பிரின்ஸ் மீடியா தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் ஆதிஷ் இசையமைத்திருக்கும் படம். திலீப் குமார், மனிஷாஜித், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டம்
ஆர்ஜிபி பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி கிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம். மலேசிய நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பில் உருவான படம்.


