சிம்பு – ஆன்ட்ரியா , புது ஜோடி…

 

inga enna solluthuவிடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற தீவிரமான யோசைனைக்குப் பின் ஆன்ட்ரியாவைத் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.

இதுவரை சிம்புவுடன் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆன்ட்ரியாவைத் தேர்வு செய்தார்களாம்.

அது பற்றி விடிவி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது .

படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது . இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு  இருக்கிறேன்,” என்றார்.

Read Previous

Vels University IV Annual Convocation

Read Next

பரபரப்பான கட்டத்தில் ‘ஆரம்பம்’

Most Popular