‘சந்தோஷ் சுப்ரமணியம், ‘திருட்டுப் பயலே’, ‘யுத்தம் செய்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘மதராசபட்டிணம்’,‘பலே பாண்டியா’,‘வேலூர் மாவட்டம்’,‘அவன் இவன்’,‘எங்கேயும் காதல்’,‘மாசிலாமணி’,‘மாற்றான்’ போன்ற பல படங்களைத் தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மெயின்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.
இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில்தான் இவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது, “நவீன சரஸ்வதி சபதம்,‘வை ராஜா வை’,‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமன்’, ‘அனேகன்’, ‘இரும்புக் குதிரை’, மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் படம் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.