‘கற்றது தமிழ்’ ராம் இயக்கி, நடித்த ‘தங்க மீன்கள்’ திரைப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும், இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ‘தங்கமீன்கள்’ மட்டுமே ஒரே தமிழ்ப்படம் என்பது குறிப்பிதக்கது.
மேலும், 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் ‘தங்கமீன்ககள்’ திரைப்படத்தை குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப் படங்களோடுத் திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
இதற்காக இயக்குனர் ராம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.