‘ஆரம்பம்’ திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஏறக்குறைய 50 கோடியைத் தொட்டிருக்க வாய்ப்புள்ளதென திரைப்பட வர்த்தக நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த வாரம் வியாழனன்று (31-10-2013) வெளியான ‘ஆரம்பம்’ திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியது.
ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த வாரக் கடைசியில் இப்படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் 50 கோடியைத் தொட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடிக்கும் மேலாகவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 6 கோடிக்கும் மேலாகவும், வெளிநாடுகளில் 10 கோடி வரையிலும் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தீபாவளிக்கு வந்த படங்களில் ஆரம்பத்திலிருந்தே ரேஸில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது இப்படம்.
அஜித் பட வசூல் வரலாற்றில் இப்படம் புதிய சாதனையை படைக்கும் என்கிறார்கள்.