‘ஜில்லா’ பெயர் ஏன் ? – இயக்குனர் நேசன்

jilla-vijay-director-nesan‘ஜில்லா’ என்று எதற்கு பெயர் வைத்தேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நேசன்.

விஜய், மோகன்லால் முதல்முறையாக இணைந்து நடிக்க சூப்பர் குட் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஜில்லா’.

படத்திற்கு ‘ஜில்லா’ என்று பெயர் வைத்தற்கான விளக்கத்தைக் கூறுகிறார் இயக்குனர் நேசன்,

“ஜில்லா’ன்னு சொன்னால் உடனே எல்லோரும் மாவட்டத்தைக் குறிக்கிற பெயருன்னு நினைச்சிக்கறாங்க. ஆனால், இந்த ஜில்லா வேற.

லொகேஷன் பார்க்கறதுக்காக மதுரைக்கு போயிருந்தப்போ சின்னச்சின்ன பசங்க கும்பலா நின்றுகொண்டு ‘ஜில்லா’ன்னு பெயர் சொல்லி ஒரு பையனைக் கூப்பிட்டாங்க. நான் டக்குன்னு திரும்பிப் பார்த்து, ‘ஜில்லான்னு ஒரு பேரா?’ன்னு கேட்டேன். ‘அந்தப் பையன் தெனாவெட்டான ஆளு சார். அந்த டைப் பசங்கள நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்’னு சொன்னாங்க.

எனக்கு அந்தப் பெயர் கேட்சிங்கா தெரிஞ்சது. விஜய் அண்ணன்கிட்ட அதைச் சொன்னப்போ, ‘எல்லாருக்கும் ஈஸியா ரீச் ஆகும்… அதையே வச்சிடுங்க’ன்னு சொன்னார்.

இதுதான் ‘ஜில்லா’ பெயர் வைக்கக் காரணம்,” என்கிறார் இயக்குனர் நேசன்.

பெயர் எப்படி இருந்தா என்ன, படம் ‘நல்லா’ வந்தால் சரி…

Read Previous

பாண்டிய நாடு – விமர்சனம்

Read Next

‘ஆரம்பம்’ – 50 கோடியைத் தொடும் வசூல்…

Most Popular