விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்குப் பின் விஜய் இயக்கும் புதிய படத்திற்கு ‘சைவம்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய்யின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
இப்படம் பற்றிய முறையான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய அறிவிப்பு விரைவில்…