புதுப் பொலிவுடன் தமிழில் வருகிறது ‘சங்கராபரணம்’

sankarabaranam_00004சுமார் 34 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றதுடன்  தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”.

ஒரு நேரடித் தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது.

பரத நாட்டியத்தையும் – இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து, ஆபாசம் வன்முறை என கமர்ஷியல் விஷயங்கள் எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி, படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்த பெருமை இந்த படத்திற்கு உண்டு. மொழி புரியாதவர்களையும் கூட  அழ வைத்தது என்பது இன்னொரு விசேஷம்.

34 வருடங்களுக்கு பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன்     35 mm திரைப்படம் சினிமாஸ்கோப் ஆகவும், DTS மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ‘சங்கராபரணம்’ உருவாகிக் கொண்டிருக்கிறது.அதற்காக  தயாரிப்பாளர்கள் ஏராளமாக செலவழித்திருக்கிறார்கள்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Read Previous

விஜய் இயக்கும் ‘சைவம்’…

Read Next

‘பிரியாணி’ – அடுத்த மாதமே ரிலீஸ்…