6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்

சமுக வலைத்தளமான யூ டுயுப் மூலம் பல ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர்கள் கோபி – சுதாகர்.

தங்களது வீடியோக்களில் தனித்துவத்தை காட்டும் இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்தை ‘கிரவுட் பண்டிங்’ முறையில் நிதி திரட்டி படத்தைத் தயாரிக்க உள்ளனர்.

அவர்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் எனப் பெயரிட்டு, பல முன்னனி இயக்குனர்களுடன் பணியாற்றிய SAK எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் கோபி, சுதாகர் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.

கிரவுட் பண்டிங் பற்றி அவர்கள் அறிவிப்பு விடுத்த நாள் முதல் பலரும் நிதி தர ஆரம்பித்தனர். இன்று வரை சுமார் 6.3 கோடிகளுக்கு மேல் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இப்படத்திற்கு ஸ்பான்ஸர் முறையில் நிதியுதவி அளித்துள்ளார்களாம்.

ஆசியாவிலேயே கிரவுட் பண்டிங் முறையில் அதிகப்படியான நிதியைப் பெற்ற ஒரே படம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது.

நிதியளித்த அனைவருக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்களும், மேலும் படம் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தைப் பற்றிய தகவலும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்படும் வெப்சைட்டில் இடம்பெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

படம் உருவாக தொடங்கிய நாள் முதல் நிதியளித்த அனைவரும் ஒரு தயாரிப்பாளர்களாக தங்களை உணரும் வகையில் அனைத்து தகவல்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

‘பண்ட் மேலன் ஆப்’ மூலமாக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படுவது முறைப்படுத்தப்பட்டு அனைத்து பண முதலீட்டார்களுக்கு விவரம் அளிக்கக வடிவமைக்கப்பட்டது.

இந்த படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜில் ஜங் ஜக், அவள், பாகுபலி நெட்பிலிக்ஸ் சீரியஸ்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிஜய் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கோபி – சுதாகர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பும், நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Read Previous

சமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்

Read Next

ஆடை – விமர்சனம்