பொங்கலுக்கு முதலில் ‘கோச்சடையான், வீரம், ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது ‘கோச்சடையான்’ படம் மேலும் தள்ளிப் போய் தமிழ் வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநயாகனாக நடித்து வரும் ‘ஜகஜ்ஜால புலபல தெனாலிராமன்’ படம் பொங்கலுக்கு வெளிவர ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறதாம்.
இறுதிக் கட்டப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடைந்து விட வாய்ப்பு உள்ளதால் படத்தை பொங்கலுக்கு வெளியிட்டு விடலாம் என தயாரிப்பு நிறுவனம் கருதுவதாகத் தெரிகிறது.
அப்படி நடந்தால், விஜய், அஜித் படங்களுடன் அவர்களுடன் காமெடியனாக நடித்த வடிவேலுவின் படமும் மோதும் நிலை ஏற்பட்டுவிடும்.
மேலும், இது பற்றிய விவரம் விரைவில்…