இன்று – 13 டிசம்பர் 2013 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
இவன் வேற மாதிரி
யு டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள படம். இசை – சத்யா. விக்ரம் பிரபு, புதுமுகம் சுரபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கோலாகலம்
பிஜிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பி.ஜி. சுரேந்திரன் இயக்கத்தில் பரணி இசையமைத்துள்ள படம். அமல், சரண்யா மோகன், பாண்டியராஜன், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சந்தித்ததும் சிந்தித்ததும்
சிபி சாம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாலு ஆனந்த் இயக்கத்தில் சபேஷ் -முரளி இசையமைப்பில் சத்யா, யுதாஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
தேடி பிடி அடி
இந்திஷ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஏகன் இயக்கத்தில் கார்த்திக் ஹர்ஷா, சரண் பிரகாஷ் இசையமைப்பில் மகி, இண்ணி, கெவின், ராஜா, அர்ஜுன், யாஷிகா, சங்கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



