சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் நடிக்கும் “ஜில்லா” படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது.
மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் இடம் பெறும் ஒரு முக்கிய சண்டைக் காட்சிக்காக ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டை பேசி வாங்கினார் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி . அதில் கொஞ்சம் பகுதியில் சமன் செய்து அதில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப் பட்டது.
அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப் பட்டது. அதில் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர்.
அதற்காக அமைக்கப்பட்ட அரங்குக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை ஆறு நவீன காமிரா யுக்தியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.
அந்த நூறு ஏக்கர் சோளக் காட்டையும் ஹெலிகேம் என்கிற நவீன காமிரா மூலம் படமாக்கி இருப்பது திரையில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும்.
‘ஜில்லா’ பொங்கலுக்கு திரைக்கு வருகிறது…